தையிட்டி விகாரை பிரச்சினையை ஆறு மாத காலத்துக்குள் தீர்த்து வைப்போம் என சிவசேனை அமைப்பினர் உறுதி அளித்துள்ளனர். யாழ். ஊடக அமையத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர். மக்களின் காணி மக்களுக்கே என்பதில் நாமும் உறுதியாக இருக்கிறோம் எனவும், இது தொடர்பில் தையிட்டி விகாரை அமையப்பெற்றுள்ள காணி உரிமையாளர்களுடன் நாம் பேசவுள்ளோம்.

அவர்களுடன் பேசிய பின்னர் விகாராதிபதியுடனும் பௌத்த மத தலைவர்களுடனும் பேசி, விகாரை தொடர்பான பிரச்சினையை முடிவுறுத்துவோம்.

அதற்கு எமக்குக் குறைந்தது ஆறு மாத காலமாவது தேவை. அதற்குள் அரசியல் செய்ய முயன்று அதனை யாரும் குழப்ப வேண்டாம் எனக் கோருவதாக சிவசேனை அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.