Header image alt text

25.02.1985இல் மரணித்த தோழர் சிவாஜிகணேசன் (மகாலிங்கம்- புதுக்குடியிருப்பு) அவர்களின் 40ஆம் ஆண்டு நினைவுகள்….

மினுவங்கொடை, பத்தண்டுவன பகுதியில் இன்று காலை 11 மணியளவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் நபரொருவர் காயமடைந்துள்ளார். 36 வயதுடைய கொட்டகம முதியான்சலாகே லஹிரு ரந்தீர் காஞ்சன என்ற முச்சக்கர வண்டி ஓட்டுநர் ஒருவரே இச்சம்பவத்தில் காயமடைந்துள்ளார். உந்துருளியில் வந்த இருவரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. Read more

ஐக்கிய இராச்சியத்திற்கான நாடாளுமன்ற துணை செயலாளர் ஹைபரியின் லார்ட் காலின்ஸூடன் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இருதரப்பு சந்திப்பை நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஆணையாளர் வோல்கர் டெர்க் மற்றும் பாலஸ்தீன வெளியுறவுத்துறை அமைச்சர் வார்சன் அகாகியன் உள்ளிட்ட பலரையும் வெளிவிவகார அமைச்சர் சந்தித்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. Read more

நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை குறித்த கலந்துரையாடலொன்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (25) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றுள்ளது. இராணுவ உயர் அதிகாரிகளுடனான குறித்த கலந்துரையாடலின் போதுஇ இலங்கையின் பாதுகாப்பு நிலைமை தொடர்பான எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. Read more

கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தியின் தாயும், சகோதரரும் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக காவல்துறையினர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர். குறித்த சந்தேக நபர்கள் கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி முன்னிலையில் இன்று பிரசன்னப்படுத்தப்பட்ட போது காவல்துறையினர் இந்த விடயத்தை நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர். Read more

மாலைதீவு மற்றும் இலங்கைக்கு இடையில் கூட்டுச் சுற்றுலா திட்டம் செயல்படுத்துவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் மாலைதீவு குடியரசின் உயர்ஸ்தானிகர் மசூத் இமாட் அவர்களுக்கும் இடையில் இன்று (25) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற சந்திப்பின் போது இது குறித்து கலந்துரையாடப்பட்டது. Read more

பொலன்னறுவை, வெலிகந்த – கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்திலிருந்து நான்கு கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர். குறித்த கைதிகள் இன்று காலை தப்பிச் சென்றதாகக் குறிப்பிடப்படுகிறது. தப்பியோடியவர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வெலிகந்த காவல்துறை தெரிவித்துள்ளது. 30 முதல் 35 வயதுக்கு இடைப்பட்ட குறித்த நால்வரும் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் எனக் குறிப்பிடப்படுகிறது.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிநிதிகள் குழுவின் புதிய பிரதானி செவரின் சபாஸுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (25) நடைபெற்றது. ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இலங்கையின் புதிய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் திட்டங்களுக்கு சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் ஆதரவை வழங்குவது குறித்து இதன் போது கவனம் செலுத்தப்பட்டது. Read more

பொது பல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இஸ்லாத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டதற்காக ஒன்பது மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்துள்ளதால், தன்னை பிணையில் விடுவிக்கக் கோரி ஞானசார தேரர் தாக்கல் செய்த சீராய்வு மனுவை விசாரித்த நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.