ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பிரதிநிதிகளுக்கும் சக தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளுக்குமிடையில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் பங்குகொள்வது தொடர்பான கலந்துரையாடல் இன்று (26.02.2025) புதன்கிழமை முற்பகல் யாழ்ப்பாணம் திருநெல்வேலி பிரைட் இன் விடுதியில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியுடன், தமிழ் மக்கள் கூட்டணி, சமத்துவக் கட்சி, ஜனநாயக தமிழரசுக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தார்கள். Read more
27.02.2022இல் மரணித்த கிளிநொச்சி முரசுமோட்டையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட தோழர் அரபாத் (சிற்றம்பலம் திருச்செல்வம்) அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவுநாள் இன்று….
அமெரிக்கா, வெளிநாடுகளுக்கான உதவியை நிறுத்தியிருப்பது இலங்கையில் பல முக்கியமான திட்டங்களைப் பாதிக்கிறது என இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் – ஆண்ட்ரே ஃபிரஞ்ச் தெரிவித்துள்ளார். அவற்றில் உணவுப் பாதுகாப்பு, பொருளாதார சீர்திருத்தங்கள், ஜனநாயக நிர்வாகம், ஊழல் எதிர்ப்பு. எல்லைப் பாதுகாப்பு மற்றும் புலம்பெயர்வு முகாமைத்துவம் போன்ற திட்டங்களும் அடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் தமிழகத்துக்கும் இலங்கைக்கும் இடையே மற்றுமொரு பயணிகள் கப்பல் சேவையை முன்னெடுப்பது தொடர்பில் ஆராயப்படுகிறது. எதிர்வரும் ஜூலை மாதம் முதல் இந்த கப்பல் சேவையை ஆரம்பிப்பது தொடர்பில் ஆராயப்படுவதாக இந்திய ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த கப்பல் சேவை இராமேஸ்வரத்திலிருந்து தலைமன்னார் வரையில் முன்னெடுக்கப்படவுள்ளது.