ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பிரதிநிதிகளுக்கும் சக தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளுக்குமிடையில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் பங்குகொள்வது தொடர்பான கலந்துரையாடல் இன்று (26.02.2025) புதன்கிழமை முற்பகல் யாழ்ப்பாணம் திருநெல்வேலி பிரைட் இன் விடுதியில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியுடன், தமிழ் மக்கள் கூட்டணி, சமத்துவக் கட்சி, ஜனநாயக தமிழரசுக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தார்கள்.
கடந்த 23.02.2025 அன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கூட்டத்தின் தொடர்ச்சியாகவே இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றதுடன், அன்று எடுக்கப்பட்ட தீர்மானங்களை ஒட்டியதாகவே விசேடமாக கலந்துரையாடப்பட்டது.