Header image alt text

2025 ஆம் ஆண்டில் அரசியல் கட்சிகளாக அங்கீகரிப்பதற்குத் தகுதியான தரப்பினரிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுவதாகத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தல் நடவடிக்கைகளுக்காக ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் கட்சியாகச் சின்னங்கள் பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்ப பத்திரம் நாளை முதல் மார்ச் மாதம் 28 ஆம் திகதி மாலை 3.00 மணிவரை ஏற்றுக்கொள்ளப்படும் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. Read more

அரகலய போராட்டத்தின் போது பாதிக்கப்பட்ட வீடுகளுக்காக நட்டஈடு பெற்றுக் கொண்ட மேலும் பலரின் பெயர்களையும் நட்டஈட்டுத் தொகை தொடர்பிலும் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தகவல்களை வெளியிட்டுள்ளார். நாடாளுமன்றில் விசேட உரையாற்றிய போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். அதன்படி, கெஸ்பெவ நகர முதல்வர் லக்ஷ்மன் பெரேரா 696 இலட்சம் ரூபாய் நட்டஈடு பெற்றுக் கொண்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். Read more

முன்னாள் சபாநாயகர்கள் உட்பட பல அதிகாரிகள் தங்கள் பதவிக் காலத்தில் பயன்படுத்திய வாகனங்கள் மற்றும் எரிபொருள் தொடர்பான பல செலவு அறிக்கைகளை சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். 2024 ஆம் ஆண்டு நவம்பர் வரை சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் 70 ஊழியர்கள் இருந்ததாக சபை முதல்வர் தெரிவித்தார். Read more

கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகருக்கும், ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று நடைபெற்றது. கொழும்பு மாளிகாவத்தையிலுள்ள அமைச்சில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இலங்கையின் கடற்றொழில் துறைக்கும், கடல் வளங்களைப் பாதுகாப்பதற்கும் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அதன் துணை அமைப்புகளால் வழங்கப்பட்டு வரும் ஒத்துழைப்புகளுக்கு அமைச்சர் நன்றி தெரிவித்தார். Read more

முன்னாள் ஜனாதிபதிகள் தமது ஆட்சிக் காலத்தில் வெளிநாட்டுப் பயணங்களுக்காகச் செலவிட்ட நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியுள்ளதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று சிறப்பு அறிக்கையொன்றை வெளியிட்டுப் பிரதமர் இதனைத் தெரிவித்தார். இதன் போது பிரதமர் நிதி தொடர்பான அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். பிரதமர் இது தொடர்பில் மேலும் உரையாற்றுகையில், Read more

உளவுத்துறை தகவல் கிடைத்தும் ஈஸ்டர் தாக்குதல்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்கத் தவறியமை குறித்துத் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் தொடர்பில் வழங்கப்பட்ட உத்தரவுக்கு அமைவாக, அறவிடப்பட்ட நிதியிலிருந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு 245 மில்லியன் ரூபா செலுத்தப்பட்டுள்ளதாகச் சட்டமா அதிபர் இன்று (27) உயர் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார். Read more

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் எகிப்து தூதுவர் ஆதில் இப்ராஹிம் அஹமட் இப்ராஹிம் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று (27) நடைபெற்றது. இந்த சந்திப்பானது ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இலங்கை மற்றும் எகிப்துக்கு இடையில் நீண்ட காலமாகக் காணப்படும் நட்புறவைப் பலப்படுத்துவது தொடர்பிலும் இருநாட்டுச் சுற்றுலா மற்றும் முதலீட்டுத் துறைகளில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. Read more

நாடளாவிய ரீதியில் இன்று (27) இடம்பெறும் தாதியர் சங்க போராட்டத்திற்கு வலுசேர்க்கும் முகமாக, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தாதியர்கள் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர். யாழ் போதனா வைத்தியசாலையின் பிரதான வளாகத்தில் ஒன்று கூடிய தாதியர்கள், பாதீட்டில் தாதியர் சேவைக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளைக் குறைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு வாசகங்களைத் தாங்கிய பதாகைகளை ஏந்திய வண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டனர். Read more

இலங்கையில் துறைமுகம் சார்ந்த திட்டங்கள் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் திட்டங்களுக்கு முதலீடு செய்ய ஜப்பானிய அரசாங்கம் உடன்பாடு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் இசொமதா அகியோவிற்கும் இடையில் இன்று (27) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பின் போது இந்த உடன்பாடு எட்டப்பட்டது. Read more

யாழ்ப்பாணம் நகர் பகுதியில் யாழ் மாவட்ட தீவக கடற்றொழிலாளர் சங்கங்களின் ஏற்பாட்டில் கண்டனப் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக இந்திய இழுவை மடி படகுகளின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கை அதிகரித்துள்ளது. கடந்த நாட்களில் அதிகளவான இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி மீன்படி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டனர். Read more