கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகருக்கும், ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று நடைபெற்றது. கொழும்பு மாளிகாவத்தையிலுள்ள அமைச்சில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இலங்கையின் கடற்றொழில் துறைக்கும், கடல் வளங்களைப் பாதுகாப்பதற்கும் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அதன் துணை அமைப்புகளால் வழங்கப்பட்டு வரும் ஒத்துழைப்புகளுக்கு அமைச்சர் நன்றி தெரிவித்தார்.

இதனை மேலும் வலுப்படுத்துவதற்குத் தேவைப்பாடும் தொழில்நுட்பம் உள்ளிட்ட உதவிகள் தொடர்பிலும் கோரிக்கை முன்வைத்தார்.

இலங்கையில் கடற்றொழிலாளர்கள் வடக்கு, கிழக்கிலுள்ள மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும், அவற்றைத் தீர்ப்பதற்கு தமது அமைச்சால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்தும் தெளிவுபடுத்தினார்.