மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரனை தமது நாட்டு சட்டத்திட்டங்களுக்கமைய இலங்கையிடம் கையளிக்க முடியாது என சிங்கப்பூர் சட்டமா அதிபர் திணைக்களம் இலங்கை சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளது. பல்வேறு சந்தர்ப்பங்களில் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநரை இலங்கைக்கு அழைத்த வருவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் அது தோல்வியடைந்ததாகவும் கூறப்படுகிறது.
சர்ச்சைக்குரிய பிணை மோசடி இடம்பெற்று இன்றுடன் 10 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளன.
2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற பிணை முறி ஏலத்தின்போது அரசாங்கத்திற்கு 10 பில்லியன் ரூபாய் நட்டத்தை ஏற்படுத்தியதாக கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழு மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரனுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்தது.
எனினும், நிதிமோசடியில் ஈடுபட்ட முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநரை இலங்கைக்கு அழைத்த வருவதற்கு எவ்விதமான சட்டத் தடையும் இல்லை என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.