உளவுத்துறை தகவல் கிடைத்தும் ஈஸ்டர் தாக்குதல்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்கத் தவறியமை குறித்துத் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் தொடர்பில் வழங்கப்பட்ட உத்தரவுக்கு அமைவாக, அறவிடப்பட்ட நிதியிலிருந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு 245 மில்லியன் ரூபா செலுத்தப்பட்டுள்ளதாகச் சட்டமா அதிபர் இன்று (27) உயர் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார். Read more
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் எகிப்து தூதுவர் ஆதில் இப்ராஹிம் அஹமட் இப்ராஹிம் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று (27) நடைபெற்றது. இந்த சந்திப்பானது ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இலங்கை மற்றும் எகிப்துக்கு இடையில் நீண்ட காலமாகக் காணப்படும் நட்புறவைப் பலப்படுத்துவது தொடர்பிலும் இருநாட்டுச் சுற்றுலா மற்றும் முதலீட்டுத் துறைகளில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
நாடளாவிய ரீதியில் இன்று (27) இடம்பெறும் தாதியர் சங்க போராட்டத்திற்கு வலுசேர்க்கும் முகமாக, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தாதியர்கள் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர். யாழ் போதனா வைத்தியசாலையின் பிரதான வளாகத்தில் ஒன்று கூடிய தாதியர்கள், பாதீட்டில் தாதியர் சேவைக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளைக் குறைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு வாசகங்களைத் தாங்கிய பதாகைகளை ஏந்திய வண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இலங்கையில் துறைமுகம் சார்ந்த திட்டங்கள் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் திட்டங்களுக்கு முதலீடு செய்ய ஜப்பானிய அரசாங்கம் உடன்பாடு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் இசொமதா அகியோவிற்கும் இடையில் இன்று (27) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பின் போது இந்த உடன்பாடு எட்டப்பட்டது.
யாழ்ப்பாணம் நகர் பகுதியில் யாழ் மாவட்ட தீவக கடற்றொழிலாளர் சங்கங்களின் ஏற்பாட்டில் கண்டனப் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக இந்திய இழுவை மடி படகுகளின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கை அதிகரித்துள்ளது. கடந்த நாட்களில் அதிகளவான இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி மீன்படி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டனர்.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பிரதிநிதிகளுக்கும் சக தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளுக்குமிடையில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் பங்குகொள்வது தொடர்பான கலந்துரையாடல் இன்று (26.02.2025) புதன்கிழமை முற்பகல் யாழ்ப்பாணம் திருநெல்வேலி பிரைட் இன் விடுதியில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியுடன், தமிழ் மக்கள் கூட்டணி, சமத்துவக் கட்சி, ஜனநாயக தமிழரசுக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தார்கள்.
27.02.2022இல் மரணித்த கிளிநொச்சி முரசுமோட்டையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட தோழர் அரபாத் (சிற்றம்பலம் திருச்செல்வம்) அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவுநாள் இன்று….
அமெரிக்கா, வெளிநாடுகளுக்கான உதவியை நிறுத்தியிருப்பது இலங்கையில் பல முக்கியமான திட்டங்களைப் பாதிக்கிறது என இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் – ஆண்ட்ரே ஃபிரஞ்ச் தெரிவித்துள்ளார். அவற்றில் உணவுப் பாதுகாப்பு, பொருளாதார சீர்திருத்தங்கள், ஜனநாயக நிர்வாகம், ஊழல் எதிர்ப்பு. எல்லைப் பாதுகாப்பு மற்றும் புலம்பெயர்வு முகாமைத்துவம் போன்ற திட்டங்களும் அடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் தமிழகத்துக்கும் இலங்கைக்கும் இடையே மற்றுமொரு பயணிகள் கப்பல் சேவையை முன்னெடுப்பது தொடர்பில் ஆராயப்படுகிறது. எதிர்வரும் ஜூலை மாதம் முதல் இந்த கப்பல் சேவையை ஆரம்பிப்பது தொடர்பில் ஆராயப்படுவதாக இந்திய ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த கப்பல் சேவை இராமேஸ்வரத்திலிருந்து தலைமன்னார் வரையில் முன்னெடுக்கப்படவுள்ளது.
25.02.1985இல் மரணித்த தோழர் சிவாஜிகணேசன் (மகாலிங்கம்- புதுக்குடியிருப்பு) அவர்களின் 40ஆம் ஆண்டு நினைவுகள்….