Header image alt text

சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Edgware ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தோழர் மூர்த்தி (கதிரவேலு இரவீந்திரன்) அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவுதினம்….
தோழர் மூர்த்தி யாழ். சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Edgware ஐ வசிப்பிடமாகவும் கொண்டவர்.

Read more

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இயங்கிய நான்கு கட்சிகளும் தமிழினத்தின் நலன் கருதி மீண்டும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று வலியுறுத்தி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே. சிவஞானம் கடிதம் மூலம் அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பில் நேரில் பேசுவதற்குக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளாக இருந்து பின்னர் பிரிந்து சென்ற ரெலோ, புளொட் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப். ஆகிய கட்சிகளுக்குக் கடிதம் மூலம் அழைப்பு விடுத்துள்ளார். Read more

மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள இருதயபுர பகுதியில் லொறி ஒன்றும் உள்ளூர் சுற்றுலா பயணிகளை ஏற்றி வந்த தனியார் பேருந்து ஒன்றும் இன்று (1) நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியில் இன்று பகல் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் காயமடைந்த 29 பேர் மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். Read more

நாட்டின் பல பகுதிகளில் இன்று காலையும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசை காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று நள்ளிரவு முதல் எரிபொருள் கொள்வனவு கட்டளை செய்யும் நடவடிக்கைகளிலிருந்து விலகுவதாக எரிபொருள் விநியோகத்தர்கள் சங்கம் அறிவித்ததைத் தொடர்ந்து எரிபொருளுக்கான வரிசை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. Read more

ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படைக்கு சொந்தமான ‘Asahi’ என்ற கப்பல்இ வழங்கல் மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இன்று (01) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இக்கப்பலில் வருகை தந்தவர்களை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு அமைவாக வரவேற்றனர். Destroyer வகைக்குச் சொந்தமான ‘Asahi’ என்ற கப்பலானது 151 மீற்றர் நீளம் கொண்டது. Read more

கணேமுல்ல சஞ்சீவவின் கொலையுடன் தொடர்புடைய மேலும் இரண்டு சந்தேகநபர்கள் மினுவங்கொடை பகுதியில் வைத்து கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மினுவங்கொடையை சேர்ந்த 28 மற்றும் 31 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொலைக்கு உதவிய குற்றச்சாட்டிலேயே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. Read more

நீடிக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் இலங்கைக்கான மற்றுமொரு தவணை கடனுக்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று குழு அங்கீகாரம் அளித்துள்ளது. 334 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான மூன்றாவது மீளாய்விற்கான கடன் தவணையை விடுவிப்பதற்கே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. Read more