நீடிக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் இலங்கைக்கான மற்றுமொரு தவணை கடனுக்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று குழு அங்கீகாரம் அளித்துள்ளது. 334 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான மூன்றாவது மீளாய்விற்கான கடன் தவணையை விடுவிப்பதற்கே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

48 மாதங்களுக்கான நீடிக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் சர்வதேச நாணய நிதியத்தால் இதுவரையான காலப்பகுதிக்குள் இலங்கைக்கு விடுவிக்கப்பட்டுள்ள மொத்த கடன் தொகையின் அளவு 1.34 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.