தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினதும் (புளொட்), அதன் மக்கள் முன்னணியான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியினதும் சிரேஷ்ட உபதலைவரும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி(DTNA)யின் முன்னாள் செயலாளருமான அமரர் தோழர் வேலாயுதம் நல்லநாதர் (இராகவன், ஆர்.ஆர்) அவர்களின் முதலாம் ஆண்டு நினைவாக சுவிஸ்லாந்தில் இன்று பிற்பகல் 14.00 மணியளவில் (02.03.2025) அஞ்சலிக் கூட்டம் ஒன்று நடைபெற்றது.
ஊடகவியலாளர் கீத் நொயர் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இராணுவ புலனாய்வுப் பிரிவின் முன்னாள் அதிகாரிகள் இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். குறித்த இருவரும் இன்று கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவர்களுக்குப் பிணை வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, சந்தேக நபர்கள் தலா 10 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கேள்வி : ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியும் ஏனைய தமிழ் அமைப்புகளும் மேற்கொண்ட தேர்தல் கூட்டணி பற்றிய கலந்துரையாடலின் இன்றைய நிலை என்ன? சில கட்சிகள் உள்வரும் செய்திகளால் உள்ளிருக்கும் சில கட்சிகள் வெளியேறுகின்றனவா?
தண்ணீறூற்று முல்லைத்தீவை பிறப்பிடமாகவும், லண்டனை வாழ்விடமாகவும் கொண்டவரும், அமரர் தோழர் வரதப்பா (வைத்திலிங்கம் கணேசலிங்கம்) அவர்களின் அன்புச் சகோதரருமான வைத்திலிங்கம் கருணாநிதி அவர்கள் இன்று (02.03.2025) ஞாயிற்றுக்கிழமை லண்டனில் காலமானார் என்பதை மிகுந்த துயருடன் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.
மலர்வு : 1956.08.12
சில மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கைகள் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி, நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு முன்னெச்சரிக்கை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கிப்பட்டுள்ளது.
முன்னாள் பொலிஸ் மாஅதிபர் தேஷபந்து தென்னகோனுக்கு வௌிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இவ்வாறு வௌிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. 2003ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதி மாத்தறை – பெலேன பகுதியிலுள்ள ஹோட்டலொன்றுக்கு அருகில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய அவரை கைதுசெய்யுமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் நேற்று முன்தினம்(28) உத்தரவிட்டது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுக்கான திகதி இவ்வார இறுதிக்குள் அறிவிக்கப்படும் எனத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மிக விரைவில் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க அண்மையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் சுதுமலை பகுதியில் 1600 போதை மாத்திரைகளுடன் இருவரை மானிப்பாய் காவல்துறையினர் கைது செய்தனர். மானிப்பாய் காவல்துறையினருக்குக் கிடைத்த புலனாய்வு தகவலுக்கமைய மானிப்பாய் காவல் நிலைய பொறுப்பதிகாரி ஜெயந்த குணதிலகவின் வழிகாட்டுதலில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தகவல் கிடைத்த பின்னர் யாழ். சுதுமலை பகுதிக்குச் சென்ற காவல்துறையினர் உந்துருளியில் பயணித்த இரு இளைஞரை வழிமறித்துச் சோதனையிட்டுள்ளனர்.