உள்ளூராட்சித் தேர்தல் சம்பந்தமாக, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஏனைய தமிழ்க் கட்சிகளுடன் நடாத்திய கலந்துரையாடலில், ஜனநாயக தமிழரசுக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டமை குறித்து, அதன் தலைவர்களில் ஒருவரான திரு. சரவணபவன் அவர்கள் தெரிவித்ததாக வெளிவந்த அறிக்கை குறித்து அவர் இன்று பதிவு செய்திருந்த கருத்து – Read more
டேசி ஃபொரஸ்ட் விக்கிரமசிங்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். நிதி தூய்தாக்கல் சட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று காலை குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு சென்றிருந்த சந்தர்ப்பத்தில் அவர் கைது செய்யப்பட்டார். இந்த விசாரணை தொடர்பில் இதற்கு முன்னர் யோஷித ராஜபக்ஸ கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் புதிய செயலாளராக டபிள்யூ.பீ. சேனாதீர நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கமைவான கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் டபிள்யு. பீ. சேனாதீரவிற்கு வழங்கினார். ஜனாதிபதி செயலகத்தில் வைத்து இன்று (05) இந்த கடிதம் வழங்கப்பட்டது.
மித்தெனிய முக்கொலைச் சம்பவத்தின் துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்டுள்ளார். வீரகெட்டிய பகுதியைச் சேர்ந்த கஜ்ஜா என அழைக்கப்படும் அருண விதானகமகே மற்றும் அவரது 8 வயது மகள்இ9 வயது மகன் ஆகியோர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிப் பலியாகினர்.
கடந்த 22 ஆம் திகதி முதல் இது வரை மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது கைது செய்யப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்று வரும் குற்றச்செயல்களில் முப்படைகளிலிருந்து தப்பியோடியவர்களுக்குத் தொடர்புள்ளமை விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
கொட்டாஞ்சேனை காவல்நிலைய பொறுப்பதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படும் நபர்களைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு புதுக்கடை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த பெப்ரவரி 21 ஆம் திகதி இரவு, கொட்டாஞ்சேனை, கல்பொத்த சந்தியில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றின் உரிமையாளர், உந்துருளியில் வந்த இருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் அனுமதி அட்டைகள் தபால்மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பாடசாலை விண்ணப்பதாரர்களின் பரீட்சை அனுமதி அட்டைகள் அதிபர்களுக்கும் தனியார் விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டைகள் அவர்களின் முகவரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.