இண்டிகோ ஏர்லைன்ஸ் இந்தியாவின் திருச்சிக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையே தினசரி விமான சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இதன்படி குறித்த விமான சேவை எதிர்வரும் மார்ச் 30ஆம் திகதி ஆரம்பமாகுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விமான சேவை வாரத்தில் ஆறு நாட்கள் இடம்பெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய திருச்சியிலிருந்து பிற்பகல் 1:25 மணிக்கு புறப்படும் இந்த விமான சேவை பிற்பகல் 2.25 மணியளவில் யாழ்ப்பாணத்தை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் யாழ்ப்பாணத்திலிருந்து பிற்பகல் 3.10க்கு திரும்பும் விமானம் மாலை 4:05க்கு திருச்சியை சென்றடையும்.