Header image alt text

09.03.2022இல் மரணித்த தோழர் கடாபி (பொன்னுத்துரை விஸ்வலிங்கம் – மட்டக்களப்பு) அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவுநாள் இன்று….

வவுனியா நொச்சிமோட்டையில் 09.03.1991இல் மரணித்த தோழர்கள் தீபன் (கந்தையா மரியதாஸ் – பாலையூற்று), நாதன் (வடிவேல் இலங்கைநாதன் – நொச்சிமோட்டை), றொபேர்ட் (சிவசுப்பிரமணியம் அரிரங்கநாதன் – கொக்குவில் கிழக்கு) ஆகியோரின் 34ஆம் ஆண்டு நினைவு நாள்

Read more

கேள்வி :
1) எத்தகைய இணக்கப்பாட்டின் அடிப்படையில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் புதுக் கட்சிகள் இணைக்கப்பட்டுள்ளன?
2) உள்ளூராட்சி மன்ற வாரியாக ஆசனப் பங்கீட்டுத் தீர்மானங்கள் எத்தகைய அடிப்படையில் எடுக்கப்படும்?
3) தேர்தலின் பின்பு மன்றங்களில் வேறு கட்சிகளோடுஇணைந்து ஆட்சியமைக்கும் சாத்தியப்பாடுகள் உள்ளனவா?
4) மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்டால் இதே கூட்டணியாகவே போட்டியிடுமா?
5) தற்போது ஏழு கட்சிக் கூட்டணியாக உள்ள கட்சியில் தீர்மானங்கள் எடுக்கும் பொறிமுறை எவ்வாறாக வகுக்கப்பட்டுள்ளது?

Read more

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடாதிருக்க இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழு தீர்மானித்துள்ளதாகக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும், பதில் பொதுச் செயலாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று வவுனியாவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியொன்றில் நடைபெற்றது. Read more

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணைக்காக புதிய நீதிபதிகள் குழாத்தை நியமிக்குமாறு சட்ட மாஅதிபர் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது. நீதிமன்றம் அது தொடர்பான தீர்ப்பை விரைவில் வழங்கும் என திணைக்களம் அறிவித்துள்ளது. பிரதிவாதிகளிடம் விளக்கங்களை கோராமல் பிரதிவாதிகள் விடுவிக்கப்பட்டதை அடிப்படையாகக் கொண்டே புதிய நீதிபதிகள் குழாத்தை நியமிக்குமாறு சட்டமா அதிபர் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது. Read more

உடன் அமுலாகும் வகையில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் நால்வர் பிரதி பொலிஸ் மாஅதிபர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அதற்கமைய, மட்டக்களப்பு பிரிவிற்கு பொறுப்பான பதில் பிரதி பொலிஸ் மாஅதிபராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் M.N.S.மென்டிஸ் மேல் மாகாண போக்குவரத்து பிரிவிற்கு பொறுப்பான பதில் பொலிஸ் மாஅதிபராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் W.P.J.சேனாதீர Read more