கணேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பில் தேடப்படும் பிரதான சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி குறித்து போலியான தகவல்களை வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மாத்தறை – திக்வெல்ல பகுதியைச் சேர்ந்த குறித்த சந்தேக நபர் இன்றைய தினம் கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெக்குனவல முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டபோது, இது தொடர்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. Read more
		    
கொழும்பிலுள்ள முக்கியமான தேசியப் பாடசாலைகளில் தமிழ் பிரிவிற்கான வகுப்புகள் குறைக்கப்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்தார். ரோயல் கல்லூரி, டி.எஸ் சேனநாயக்க கல்லூரி, இசிப்பதான கல்லூரி ஆகியவற்றில் தமிழ் பிரிவிற்கான வகுப்புகள் குறைக்கப்பட்டு வருவதாக தரவுகளுடன் இன்றைய குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு மனோ கணேசன் முன்வைத்திருந்தார். 
மன்னார் நீதிமன்றத்திற்கு முன்பாக இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் சந்தேகநபர்கள் எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 7 சந்தேகநபர்களில் ஐவர் ஏற்கனவே அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்தப்பட்ட நிலையில் ஏனைய இருவரும் இன்று அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்தப்பட்டனர்.