மன்னாரில் 484 மெகாவாட் காற்றாலை மின்திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல எண்ணியுள்ளதாக இலங்கைக்கான Adani Green Energy  நிறுவனத்தால் எரிசக்தி அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதிநவீன தொழில்நுட்பத்தின் ஊடாக இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்காக அதனுடன் தொடர்புடைய பரிமாற்ற கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும் தாம் எதிர்பார்த்துள்ளதாக Adani Green Energy நிறுவனம் தெரிவித்துள்ளது. Read more
		    
எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் முல்லைத்தீவு மாவட்டத்தின் சகல உள்ளூராட்சிச் சபைகளிலும் போட்டியிடுவதற்காக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி கட்டுப் பணத்தைச் செலுத்தியுள்ளது. கரைதுறைப்பற்று பிரதேச சபை, புதுக்குடியிருப்பு பிரதேசபை, மாந்தை கிழக்குப் பிரதேச சபை, துணுக்காய் பிரதேச சபை ஆகிய சபைகளுக்கான கட்டுப் பணத்தை ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரும் புளொட் அமைப்பின் பொருளாளருமான கந்தையா சிவநேசன் (பவன்) அவர்கள் செலுத்தி வேட்புமனுப் பத்திரங்களை பெற்றுக் கொண்டார்.
தேஷபந்து தென்னகோனை காணும் இடத்தில் கைது செய்யுமாறு பகிரங்க  பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாத்தறை நிதவான் நீதிமன்றம் இந்த பிடியாணையை பிறப்பித்துள்ளது. தேஷபந்து தென்னகோனை கைது செய்யுமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் கடந்த 28ஆம் திகதி பிடியாணை பிறப்பித்திருந்தது. 
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 29ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு உயர் நீதிமன்றத்தால் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. ரோயல் பார்க் கொலை சம்பவம் தொடர்பில் மரணதண்டனை விதிக்கப்பட்ட ஜூட் ஷ்ராமன்த ஜயமகவிற்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பை இரத்துச்செய்து ஒரு மில்லியன் ரூபாவை நட்டஈடாக செலுத்துமாறு நீதிமன்றம் வழங்கிய உத்தரவை நடைமுறைப்படுத்தத் தவறியமைக்கான காரணங்களை முன்வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.