கடந்த 22.02.2024 அன்று இயற்கையெய்திய, புளொட் அமைப்பின் சிரேஷ்ட உப தலைவரும், D.T.N.A இனது முன்னாள் செயலாளருமான அமரர் தோழர் வேலாயுதம் நல்லநாதர் (இராகவன், ஆர்.ஆர்.) அவர்களின் ஓராண்டு திதி நிகழ்வு இன்று 12.03.2025 புதன்கிழமை இணுவில் மஞ்சத்தடியில் அமைந்துள்ள அருணகிரிநாதர் சிவசுப்பிரமணியர் மண்டபத்தில் நடைபெற்றது.
		    
துறைநீலாவணையில் 12.03.1986இல் மரணித்த தோழர்கள் மாமா (முருகேசு ஸ்ரீதரன் – துறைநீலாவணை-08), கதிரவேல்(விசு), புலேந்திரன்(ரகுபதி), தருமன், தவராசா ஆகியோரின் 39ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று..
எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் வவுனியா மாவட்டத்தில் வவுனியா தெற்கு சிங்களப் பிரதேச சபை தவிர்ந்த ஏனைய சகல உள்ளூராட்சிச் சபைகளிலும் போட்டியிடுவதற்காக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி இன்று வவுனியா மாவட்டத் தேர்தல் அலுவலகத்தில் கட்டுப் பணத்தைச் செலுத்தியுள்ளது. வவுனியா மாநகரசபை, வவுனியா வடக்குப் பிரதேசபை, வவுனியா தெற்கு தமிழ்ப் பிரதேச சபை, வெங்கலச்செட்டிக்குளம் பிரதேச சபை ஆகிய சபைகளுக்கான கட்டுப் பணத்தை,
12.03.1984இல் மரணித்த தோழர் சாந்தன் (நகுலநாதன் – முருங்கன்) அவர்களின் 41ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…..
சம்பூர் சூரிய மின் உற்பத்தி நிலையத்திற்கான நிர்மாணப் பணிகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு ஜனாதிபதி உரையாற்றினார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி சம்பூர் நிலத்தடி சூரிய மின் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்க எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி இலங்கைக்கு வருகைத் தருவார். இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டு இந்தியப் பிரதமர் இலங்கைக்கு வருகை தரவுள்ளார். 
இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்கத் தூதரகத்தின் அரசியல் அலுவலர் கெவின் பிரைஸ் தலைமையிலான குழுவினர் இன்று வடக்கிற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர். இந்தக் குழு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு விஜயம் மேற்கொண்டு துணைவேந்தர் மற்றும் பீடாதிபதிகளுடன் கலந்துரையாடினர். அமெரிக்கத் தூதரகத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அலுவலர் கெவின் பிரைஸ், அரசியல் நிபுணர்களான நஸ்றின் மரிக்கார் மற்றும் சரித்த பெர்ணாண்டோ ஆகியோரே இன்று நண்பகல் பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்தனர். 
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்காளர்களின் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழு அறிக்கை ஒன்றினை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று (12) நள்ளிரவு 12.00 மணியுடன் நிறைவடையவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் திகதி மார்ச் மாதம் 17ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிவரை நீடிக்கப்படுவதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.