எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் வவுனியா மாவட்டத்தில் வவுனியா தெற்கு சிங்களப் பிரதேச சபை தவிர்ந்த ஏனைய சகல உள்ளூராட்சிச் சபைகளிலும் போட்டியிடுவதற்காக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி இன்று வவுனியா மாவட்டத் தேர்தல் அலுவலகத்தில் கட்டுப் பணத்தைச் செலுத்தியுள்ளது. வவுனியா மாநகரசபை, வவுனியா வடக்குப் பிரதேசபை, வவுனியா தெற்கு தமிழ்ப் பிரதேச சபை, வெங்கலச்செட்டிக்குளம் பிரதேச சபை ஆகிய சபைகளுக்கான கட்டுப் பணத்தை,
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் செ.மயூரன், கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் க. சந்திரகுலசிங்கம்( மோகன்), கட்சியின் வவுனியா மாவட்ட செயலாளர் மூர்த்தி,
கட்சியின் தேசிய அமைப்பாளர் பீற்றர், ஈ. பி. ஆர். எல். எவ் சார்பில் மோசஸ் உள்ளிட்டவர்கள் சென்று செலுத்தி வேட்புமனுப் பத்திரங்களை பெற்றுக் கொண்டனர்.
 
 
 
 