எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில், பொத்துவில், காரைதீவு ஆகிய பிரதேச சபைகளுக்கான கட்டுப் பணத்தை நேற்று ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் அம்பாறை மாவட்ட தேர்தல் முகவர் திரு. ஹென்றி மகேந்திரன் அவர்கள் மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் செலுத்தி வேட்புமனுப் பத்திரங்களை பெற்றுக் கொண்டார். இதேவேளை இன்று காலை சுப வேளையில் காரைதீவு பிரதேச சபையின் முதன்மை வேட்பாளராக போட்டியிடுவதற்கு கட்சியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் திரு ப, ரவிச்சந்திரன் (சங்கரி) அவர்கள் வேட்புமனுவில் கையெழுத்திட்டார்.
		    
வவுனியாவில் 13.03.1989 அன்று மரணித்த தோழர் விஜி (வில்லியம்ஸ் யூட் நிரஞ்சன்) அவர்களின் 36ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று..
எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் மன்னார் பிரதேச சபை தவிர்ந்த ஏனைய சகல உள்ளூராட்சிச் சபைகளிலும் போட்டியிடுவதற்காக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி மன்னார் மாவட்டத் தேர்தல் அலுவலகத்தில் கட்டுப் பணத்தைச் செலுத்தியுள்ளது. மன்னார் நகரசபை, நானாட்டான் பிரதேசபை, மாந்தை மேற்குப் பிரதேச சபை, முசலிப் பிரதேச சபை ஆகிய சபைகளுக்கான கட்டுப் பணத்தை ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் மன்னார் மாவட்ட தேர்தல் முகவரும் ரெலோ அமைப்பின் மாவட்ட அமைப்பாளருமான திரு. வசந்தன் அவர்கள் செலுத்தி வேட்புமனுப் பத்திரங்களை பெற்றுக் கொண்டார்.
காலி – அக்மீமன, தலகஹ பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் காலி பூஸ்ஸ அதிஉயர் பாதுகாப்பு சிறைச்சாலையின் முன்னாள் உதவி அத்தியட்சகர் ஒருவர் உயிரிழந்தார். இன்று பிற்பகல் அவர் தமது வீட்டு முற்றத்தில் இருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச்சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். 09 மில்லிமீற்றர் ரக கைத்துப்பாக்கியில் இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் நடவடிக்கை நிறைவடைந்த நாளிலிருந்து 35 அல்லது 49 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். 
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா உடல் நலக்குறைவு காரணமாக சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மகர சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப்பேச்சாளர் காமினி பி திசாநாயக்க தெரிவித்துள்ளார். 
மித்தெனிய முக்கொலை சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால், கடுவன அங்குலன்தெனிய பகுதியைச் சேர்ந்த 23 வயதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தினூடாக துபாய்க்கு செல்ல முற்பட்ட போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.