மித்தெனிய முக்கொலை சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால், கடுவன அங்குலன்தெனிய பகுதியைச் சேர்ந்த 23 வயதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தினூடாக துபாய்க்கு செல்ல முற்பட்ட போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

முக்கொலை சம்பவத்திற்கு ஒத்துழைப்பு வழங்கியமை தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபரே நேற்றிரவு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதற்கமைய, சம்பவம் தொடர்பில் இதுவரை 11 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மித்தெனிய பொலிஸாரும் தங்காலை குற்ற விசாரணை பிரிவின் அதிகாரிகளும் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கடந்த மாதம் 18ஆம் திகதி மீகஸ்ஆரே கஜ்ஜா என அழைக்கப்படும் அருண விதானகமகே சுட்டுக்கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.