உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கட்டுப்பணம் செலுத்தியுள்ளார். இன்று பிற்பகல் யாழ்ப்பாணத்தில் உள்ள தேர்தல்கள் அலுவலகத்தில், யாழில் உள்ள 5 உள்ளூராட்சி சபைகளுக்குமான கட்டுப்பணத்தை செலுத்தியதாக இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.  Read more
		    
புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் வைத்து கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக்கொல்லப்பட்ட தினத்தன்று கணேமுல்ல சஞ்சீவவின் பாதுகாப்பிற்கு பொறுப்பாக இருந்த சிறைக்காவலரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
திருகோணமலையில் கார் மற்றும் நகைகள் திருடப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. காரொன்றில் வருகை தந்த மூவர் தம்பதியினரை அச்சுறுத்தி கார்,  நகைகள், பணம் ஆகியவற்றைக் கொள்ளையடித்து சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 
கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ் மாஅதிபர் தேஷபந்து தென்னகோன் தாக்கல் செய்த ரிட் மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று(17) நிராகரித்துள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைமை நீதிபதி மொஹம்மட் லஃபார் தாஹீர் தலைமையிலான நீதிபதிகள் குழாத்தினால் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாமலேயே நிராகரிக்கப்பட்டுள்ளது. 
T-56 துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் வெடிக்காத தோட்டாக்கள் அடங்கிய பை ஒன்று புதரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு, சிலாவத்தை, தியோநகர் பகுதியில் இவை கண்டெடுக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கடற்படை அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், கடற்படையினரும் காவல்துறையினரும் மேற்கொண்ட தேடுதலின் போது பொதியொன்றினுள் வெடிக்காத நிலையில் 1,400 T-56 ரக தோட்டாக்கள் மீட்கப்பட்டன.