திருகோணமலையில் கார் மற்றும் நகைகள் திருடப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. காரொன்றில் வருகை தந்த மூவர் தம்பதியினரை அச்சுறுத்தி கார்,  நகைகள், பணம் ஆகியவற்றைக் கொள்ளையடித்து சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும் குறித்த தம்பதியினர் அளித்த முறைப்பாட்டைத் தொடர்ந்து திருகோணமலை காவல் நிலைய அதிகாரிகள் குழுவினால் கிண்ணியா பாலத்திற்கு அருகில் வைத்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.