வவுனியா திருநாவற்குளத்தில் 18.03.1999இல் மரணித்த lதிருமதி வேலாயுதம் பவானிதேவி (பவானி அன்ரி) அவர்களின் 26ஆம் ஆண்டு நினைவுகள்…
Posted by plotenewseditor on 18 March 2025
Posted in செய்திகள்
வவுனியா திருநாவற்குளத்தில் 18.03.1999இல் மரணித்த lதிருமதி வேலாயுதம் பவானிதேவி (பவானி அன்ரி) அவர்களின் 26ஆம் ஆண்டு நினைவுகள்…
Posted by plotenewseditor on 18 March 2025
Posted in செய்திகள்
கொழும்பில் 18.03.2003இல் மரணித்த தோழர் ரகு (கதிர்காமநாதன் இரகுபதி) அவர்களின் 22ஆம் ஆண்டு நினைவுகள்…
Posted by plotenewseditor on 18 March 2025
Posted in செய்திகள்
சுகாதார தொழில் வல்லுநர்களின் ஒன்றியத்தினால் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட அடையாள பணிப்புறக்கணிப்பினால் நோயாளர்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர். பாதீட்டின் ஊடாக தங்களுக்கான கொடுப்பனவுகளை குறைப்பற்கு எடுக்கப்பட்ட தீர்மானம் உள்ளிட்ட விடயங்களுக்கு தீர்வுகோரி 18 சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று காலை 7 மணிமுதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தன. Read more
Posted by plotenewseditor on 18 March 2025
Posted in செய்திகள்
பொலிஸ் மாஅதிபர் தேஷபந்து தென்னகோனின் சொத்துக்களை அடையாளங்காணும் மற்றும் பட்டியலிடும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதற்காக சில குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதனிடையே பொலிஸ் மாஅதிபர் தேஷபந்து தென்னகோனை கைது செய்வதற்கான ஒன்றிணைந்த சுற்றிவளைப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. Read more
Posted by plotenewseditor on 18 March 2025
Posted in செய்திகள்
ஜனாதிபதிக்கும் மேல் மாகாண காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் இடையில் இன்று ஜனாதிபதி செயலகத்தில் விசேட சந்திப்பு ஒன்று நடைபெற்றது. திட்டமிடப்பட்ட குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்குத் தேவையான வசதிகளை வழங்கவும், புதிய சட்டங்களைத் தயாரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதன்போது தெரிவித்தார். சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாப்பது காவல்துறை திணைக்களத்தின் பொறுப்பு என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். Read more
Posted by plotenewseditor on 18 March 2025
Posted in செய்திகள்
மியன்மாரின் – மியாவதியில் உள்ள சைபர் குற்ற முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர்களில் மேலும் ஒரு குழு மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு மீட்கப்பட்ட 14 இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. Read more
Posted by plotenewseditor on 18 March 2025
Posted in செய்திகள்
கொடுப்பனவு குறைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து 19 சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று(18) காலை 7 மணி முதல் நாளை(19) காலை 7 மணி வரை அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டாலும் அத்தியாவசிய மற்றும் அவசர சேவைகள் தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார தொழிற்சங்கங்களின் சம்மேளனத்தின் பிரதிநிதிகளான சமன் ரத்னபிரிய மற்றும் ரவி குமுதேஷ் ஆகியோர் நேற்று(17) நிதி அமைச்சின் அதிகாரிகளுடன் கலந்துரையாடினர். Read more
Posted by plotenewseditor on 18 March 2025
Posted in செய்திகள்
கொழும்பு கிராண்ட்பாஸ் – நாகலம் வீதியில் நேற்றிரவு(17) நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இருவர் காயமடைந்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்தியுள்ளதுடன் அவர்கள் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கிராண்ட்பாஸைச் சேர்ந்த 22, 28 வயதான 2 இளைஞர்களே துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தனர். Read more