பிடியாணை பிறப்பிக்கப்பட்டு ஒரு மாதத்திற்கு மேல் தலைமறைவாகி கண்ட இடத்தில் கைது செய்யம்படி நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டு பொலிஸாரால் தேடப்பட்டுவந்த தேஷபந்து தென்னகோன் மாத்தறை நீதிமன்றில் இன்று(19) முற்பகல் ஆஜரானார். அவரை நாளை(20) வரை விளக்கமறியலில் வைப்பதாக மாத்தறை நீதவான் உத்தரவிட்டார். Read more
		    
அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட இரு பிரதிவாதிகளுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை ஏப்ரல் 30 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செய்தித்தாள் அச்சிடுவதற்கான காகிதங்களை வாங்கியதன் மூலம் 12 மில்லியன் ரூபாயை மோசடி செய்ததாகக் கூறி, இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனாவல முன்னிலையில் இன்று இந்த வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி நாளை அறிவிக்கப்படும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் காலப்பகுதி இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்தது. அதேநேரம் வேட்புமனுக்கள் நாளை நண்பகல் 12 மணி வரை ஏற்றுக் கொள்ளப்படும். 
ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் கார்மென் மொரினோவுக்கும்  சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவிற்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றது. ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இலங்கை நாடாளுமன்றம் என்பவற்றுக்கிடையில் ஒத்துழைப்பை ஏற்படுத்தி எதிர்காலத்தில் மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது. 
முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவை கைது செய்வதற்கான விசாரணைகள் தொடர்வதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அவரை கைது செய்வதற்காகப் பல கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இன்றுடன் 11 நாட்கள் கடந்துள்ள போதிலும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர இன்னும் கைது செய்யப்படவில்லை. 
உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் புதிய ஆணையாளர் நாயகமாக ருக்தேவி பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார். நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி முன்வைத்த அமைச்சரவை பத்திரத்திற்கு வழங்கப்பட்ட அனுமதிக்கமைய இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. 
மாத்தளை மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார். குறித்த பெண் இலங்கை குடியுரிமையைப் பெற்றுள்ளதாகவும், தேர்தலில் போட்டியிடத் தகுதி பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அவர் கலேவல பிரதேச சபை வேட்பாளராகப் போட்டியிடவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.