உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் புதிய ஆணையாளர் நாயகமாக ருக்தேவி பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார். நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி முன்வைத்த அமைச்சரவை பத்திரத்திற்கு வழங்கப்பட்ட அனுமதிக்கமைய இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
1999 ஆம் ஆண்டு உள்நாட்டு இறைவரி திணைக்களத்தில் சேவையை ஆரம்பித்த அவர் பிரதி ஆணையாளர், ஆணையாளர். சிரேஷ்ட ஆணையாளர் மற்றும் பிரதி ஆணையாளர் நாயகமாக பதவி வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.