வவுனியா, முல்லைத்தீவு ஆகிய இரு மாவட்டங்களிலும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி சமர்ப்பித்த அனைத்து வேட்பு மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. மன்னார் மாவட்டத்தில் மாந்தை மேற்கு தவிர்ந்த ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி சமர்ப்பித்த ஏனைய அனைத்து வேட்பு மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. மாந்தை மேற்கிற்கான வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
		    
சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் புத்திக மனதுங்க, காவல்துறை ஊடகப்பேச்சாளர் பதவியிலிருந்து விலகியுள்ளார். அதற்கமைய, அவர் தனது பதவி விலகல் கடிதத்தை பதில் காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரியவுக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தனது தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் இந்தப் பதவியிலிருந்து விலகியுள்ளதாக கூறப்படுகிறது. 
உள்நாட்டு இறைவரி சட்டமூலம் இன்று (20) நாடாளுமன்றத்தில் திருத்தமின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சட்டமூலம் தொடர்பான இரண்டாம் வாசிப்பு தொடர்பான விவாதம் இன்று மாலை 5.00 மணி முதல் 5.40 மணிவரை இடம்பெறவுள்ளது. குறித்த சட்டமூலம், குழுவின் பரிசீலனைக்கு பின்னர் எவ்வித திருத்தங்களுமின்றி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் இராஜாங்க அமைச்சர்களான பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தன் மற்றும் சதாசிவம் வியாழேந்திரன் தலைமையிலான கிழக்கு தமிழர் கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 11 உள்ளுராட்சி மன்றங்களுக்காக இன்றைய தினம் வேட்புமனுவை தாக்கல் செய்தது. 
தேர்தலை இலக்காகக் கொண்டு தங்களது தரப்பு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் இணையவில்லை எனத் தமிழ்த் தேசிய கட்சியின் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் குறிப்பிட்டார். தற்போது அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 
வியட்நாம் தேசிய சட்டமன்றத்தின் துணைத் தலைவர் நுகுயென் டக் ஹை தலைமையிலான வியட்நாம் நாடாளுமன்றத் தூதுக்குழுவினர் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்று (19) இலங்கைக்கு வருகை தந்தனர். சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவின் அழைப்பையேற்று அவர்கள் நாட்டை வந்தடைந்தனர். 
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி நடத்துவதற்குத் தீர்மானித்துள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 336 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் வேட்புமனுக்கள் இன்று நண்பகல் 12 மணி வரை ஏற்றுக்கொள்ளப்பட்டன. உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு 2023 ஆம் ஆண்டில் வேட்பு மனு கோரப்பட்ட போதிலும் கடந்த அரசாங்கம் தேர்தலை நடத்துவதற்குத் தேவையான நிதியை வழங்காமையின் காரணமாகத் தேர்தலை ஒத்திவைக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது. 
உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் பின்லாந்து எட்டாவது ஆண்டாக முதலிடத்தைப் பிடித்துள்ளது. டென்மார்க், ஐஸ்லாந்து, நோர்வே மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகளும் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளன. மற்றவர்கள் மீதான நம்பிக்கை, எதிர்காலம் மீதான நம்பிக்கை, நிறுவனங்கள் மீதான நம்பிக்கை மற்றும் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் ஆதரவு ஆகியவற்றின் காரணமாக பின்லாந்து மக்கள் ஏனையவர்களை விட மகிழ்ச்சியாக இருப்பதாக வருடாந்த மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.