வியட்நாம் தேசிய சட்டமன்றத்தின் துணைத் தலைவர் நுகுயென் டக் ஹை தலைமையிலான வியட்நாம் நாடாளுமன்றத் தூதுக்குழுவினர் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்று (19) இலங்கைக்கு வருகை தந்தனர். சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவின் அழைப்பையேற்று அவர்கள் நாட்டை வந்தடைந்தனர்.
இந்தத் தூதுக்குழுவினர் இன்று (20) இலங்கை நாடாளுமன்றத்திற்கு விஜயம் மேற்கொண்டு, சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன, பிரதமர் ஹரிணி அமரசூரிய, பிரதிச் சபாநாயகர் ரிஸ்வி சாலி மற்றும் அமைச்சர்கள் சிலரைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளனர்.
,இந்தக் குழுவினர் இலங்கையிலிருந்து புறப்பட முன்னர் தலதா மாளிகையைத் தரிசனம் செய்யவிருப்பதுடன், சர்வதேச பௌத்த அருங்காட்சியகத்தையும் பார்வையிடவுள்ளனர்.