யாழ்ப்பாண மாவட்டத்தில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி சமர்ப்பித்த வேட்புமனுக்களில் வலிகாமம் தெற்கு, வலிகாமம் தென்மேற்கு, வலிகாமம் வடக்கு, சாவகச்சேரி பிரதேச சபை, சாவகச்சேரி நகரசபை, பருத்தித்துறை பிரதேச சபை, பருத்தித்துறை நகரசபை ஆகிய ஆறு சபைகளுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதோடு, யாழ்ப்பாண மாவட்டத்தில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி சமர்ப்பித்த ஏனைய சபைகளுக்கான வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
அத்துடன் கிளிநொச்சி மாவட்டத்தில் பச்சிலைப்பள்ளி(பளை) பிரதேச சபைக்கான ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதோடு, கரைச்சி பிரதேச சபைக்கான வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.