மலர்வு – 07.04.1937Posted by plotenewseditor on 22 March 2025
Posted in செய்திகள்
மலர்வு – 07.04.1937Posted by plotenewseditor on 22 March 2025
Posted in செய்திகள்
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வலிதெற்கு பிரதேச சபை வேட்பாளர்களுக்கான கலந்துரையாடல் இன்றையதினம் (22.03.2025) நடைபெற்றது. இச்சந்திப்பில் புளொட் தலைவரும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் இணைத்தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், கட்சியின் யாழ் மாவட்ட இணைப்பாளரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினரும், ஆசிரியருமான பா.கஜதீபன், வலிதெற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் க.தர்சன் உள்ளிட்ட வலிதெற்கு பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் வலிதெற்கு பிரதேச சபைக்கான தற்போதைய வேட்பாளர்களும் கலந்து கொண்டிருந்தார்கள்.Posted by plotenewseditor on 22 March 2025
Posted in செய்திகள்
யோஷித ராஜபக்ஸவுடன் சென்ற சிலர் நடத்திய தாக்குதலில் கொழும்பு யூனியன் பிளேஸ், பார்க் வீதியிலுள்ள இரவு களியாட்ட விடுதியின் பாதுகாப்பு உத்தியோகத்தர் காயமடைந்துள்ளார். யோஷித ராஜபக்ஸ மற்றும் அவரது மனைவியுடன் இந்தக் குழுவினர் இன்று(22) அதிகாலை இரவு களியாட்ட விடுதிக்கு வந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். Read more
Posted by plotenewseditor on 22 March 2025
Posted in செய்திகள்
தேர்தல்கள் ஆணைக்குழுவினால் இன்று புதிய செயலியொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஊடாக தேர்தல் தொடர்பிலான முறைப்பாடுகளை பொது மக்கள் நேரடியாக அறிவிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Posted by plotenewseditor on 22 March 2025
Posted in செய்திகள்
மாத்தறை ரூனெயளர் தேவேந்திரமுனை பகுதியில் இருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் 3 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் பெண் ஒருவரும் உள்ளடங்குவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நேற்றிரவு மாத்தறை தேவேந்திரமுனை பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர். உந்துருளியில் பயணித்த இருவரை இலக்கு வைத்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். Read more
Posted by plotenewseditor on 22 March 2025
Posted in செய்திகள்
இலங்கையில் 28.4% பாடசாலை மாணவர்கள் ஸ்மார்ட் கையடக்க தொலைப்பேசிகளைப் பயன்படுத்துவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட உலகளாவிய பாடசாலை சார்ந்த மாணவர் சுகாதார கணக்கெடுப்பு அறிக்கையினூடாக குறித்த விடயம் தெரியவந்துள்ளது. இதில் 31.3 சதவீதமானோர் சிறுவர்கள் எனவும் மீதமுள்ளவர்களில் 25.5 சதவீதமானோர் பெண்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. Read more
Posted by plotenewseditor on 22 March 2025
Posted in செய்திகள்
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் ஏராளமான நிதி முறைகேடுகள் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இளைஞர்கள் சேவைகள் மன்றத்தின் செயற்பாடுகள் தொடர்பில் விசாரணை செய்வதற்கு நியமிக்கப்பட்ட கோப் குழு இந்த தகவல்களை வெளிப்படுத்தியுள்ளது. அண்மையில் நடைபெற்ற கோப் குழு கூட்டத்தில் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற அதிகாரிகளின் நடவடிக்கைகள் குறித்தும் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளது.
Posted by plotenewseditor on 22 March 2025
Posted in செய்திகள்
வரக்காபொலவில் இலங்கை போக்குவத்துக்கு சொந்தமான இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் 30 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.