ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வலிகாமம் வடக்கு பிரதேச சபை வேட்பாளர்களுக்கான கலந்துரையாடல் இன்றையதினம் (23.03.2025) தெல்லிப்பழை காங்கேசந்துறை வீதியில் அமைந்துள்ள வாலிபர் ஐக்கிய சங்க சனசமூக நிலையத்தில் நடைபெற்றது. இச்சந்திப்பில் புளொட் தலைவரும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் இணைத்தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், Read more
		    
இந்தியாவில் உள்ள இலங்கை ஏதிலிகளை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருவது தொடர்பான உடன்படிக்கையொன்றை ஏற்படுத்துவதற்கு உரிய தரப்புகளிடம் கோரிக்கை முன்வைப்பதாக வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் தங்கியுள்ள இலங்கை ஏதிலிகளை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருவது தொடர்பில், அந்த செயற்பாடுகளை முன்னெடுத்துவரும் அரச சாரா நிறுவனத்துடன், வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் பின்னர் தேர்தல் தொடர்பான செலவு அறிக்கையை சமர்ப்பிக்க தவறுபவர்கள் மூன்று வருடங்களுக்கு வாக்களிக்கும் உரிமையை இழக்க நேரிடும் என பெப்ரல் அமைப்பு அறிவித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் நடைபெற்ற சந்திப்பின் பின்னர் பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி இதனைத் தெரிவித்துள்ளார். 
2025 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குச்சீட்டுகளை அச்சிடும் பணிகளை இன்று முதல் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மாவட்டச் செயலகங்களிலிருந்து பெறப்படும் வரிசையில், வாக்குச் சீட்டுகள் தொடர்பான விபரங்கள் அச்சகத்திற்கு அனுப்பப்படும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்தார். 
இலங்கையில் முதல் விந்தணு வங்கி கொழும்பு காசல் மகப்பேற்று வைத்தியசாலையில் நிறுவப்பட்டுள்ளது. மலட்டுத்தன்மையால் பாதிக்கப்பட்டுள்ள தம்பதியினருக்கு தீர்வு வழங்கும் நோக்கில் விந்தணு வங்கி அமைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு காசல் மகப்பேற்று வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அஜித் தன்தநாராயணா தெரிவித்தார். 
நாட்டிலுள்ள சுமார் 10 இலட்சம் குற்றவாளிகளின் கைவிரல் அடையாளங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன. நீதிமன்றங்களின் ஊடாக குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டவர்களின் கைவிரல் அடையாளங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் குற்றப்பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
தையிட்டியில் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டுள்ள மற்றுமொரு கட்டடம் திறக்கப்படுகின்றமைக்கு யாழ்ப்பாணம் – தையிட்டியில் சட்டவிரோத விகாரை கட்டுமானம் அமைந்துள்ள பகுதியில் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டுள்ள மற்றுமொரு கட்டடம் திறக்கப்படுகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, குறித்த பகுதியில் காணி உரிமையாளர்கள் உள்ளிட்ட தரப்பினரால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 
மாத்தறை ரூனெயளர் தேவேந்திரமுனை பகுதியில் இருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான மூவரில் குறித்த கொலைக்கான ஒப்பந்தத்தை வழங்கியதாகக் கூறப்படும் நபரின் மனைவியும் அடங்குவதாக காவல்துறை தெரிவித்துள்ளது. நேற்று கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்கள் கந்தர மற்றும் தேவேந்திரமுனை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.