ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வலி தென்மேற்கு (மானிப்பாய்) பிரதேச சபை வேட்பாளர்களுக்கான கலந்துரையாடல் இன்றையதினம் (24.03.2025) கந்தரோடையில் நடைபெற்றது. இச்சந்திப்பில் புளொட் தலைவரும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் இணைத்தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், கட்சியின் யாழ் மாவட்ட இணைப்பாளரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினரும், ஆசிரியருமான பா.கஜதீபன்,
		    
 
கேள்வி 01 : ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் பங்காளிக் கட்சியாக இயங்கிய தமிழ்த் தேசியக் கட்சி நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில் கஜேந்திரகுமாரின் கூட்டணிக் கட்சியாக மாறியுள்ளதே? இது குறித்து உங்கள் கூட்டணியின் நிலைப்பாடு என்ன? இதன் தாக்கங்கள் என்ன?
வவுனியா தேக்கவத்தைப் பகுதியில் இராணுவம் மற்றும் காவல்துறையினர் திடீர் சுற்றி வளைப்பு மேற்கொண்டு தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் தேடப்படும் நபர்களைக் கைது செய்தல் மற்றும் போதைப் பொருளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் குறித்த திடீர் சுற்றி வளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 
மன்னார், பூநகரி மற்றும் தெஹியத்தகண்டிய ஆகிய பிரதேச சபைகளுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று ஆரம்பமாகியுள்ளது. அதற்கமைய, எதிர்வரும் 27 ஆம் திகதி நண்பகல் 12 மணியுடன் குறித்த மூன்று பிரதேச சபைகளுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவடையவுள்ளது. 
வாரியபொலவில் விபத்துக்குள்ளான இலங்கை விமானப்படையின் விமானிகளைப் பயிற்றுவிக்கும் K8 ரக விமானத்தில் எந்தக் கோளாறும் இல்லை என்பது விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டதாக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். விபத்து தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். 
தேர்தல்கள் ஆணைக்குழுவின் அனுமதியுடன், தேசிய காவல்துறை ஆணைக்குழுவினால் காவல்துறை அதிகாரிகள் சிலருக்கு உடன் அமுலாகும் வகையில் இடமாற்றம் மற்றும் புதிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, பிரதி காவல்துறை மா அதிபர்கள் இருவருக்கும் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர்கள் இருவருக்கும் இவ்வாறு இடமாற்றம் மற்றும் புதிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.