மன்னார், பூநகரி மற்றும் தெஹியத்தகண்டிய ஆகிய பிரதேச சபைகளுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று ஆரம்பமாகியுள்ளது. அதற்கமைய, எதிர்வரும் 27 ஆம் திகதி நண்பகல் 12 மணியுடன் குறித்த மூன்று பிரதேச சபைகளுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவடையவுள்ளது.
இதனிடையே. உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக மன்னார், பூநகரி மற்றும் தெஹியத்தகண்டிய ஆகிய பிரதேச சபைகளுக்கான கட்டுப்பணம் செலுத்துவதற்கான கால அவகாசம் எதிர்வரும் 26 ஆம் திகதி நண்பகல் 12 மணியுடன் நிறைவடையவுள்ளது.
இதேவேளை, ஏனைய உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20 ஆம் திகதி நண்பகலுடன் நிறைவடைந்திருந்தது.