வவுனியா தேக்கவத்தைப் பகுதியில் இராணுவம் மற்றும் காவல்துறையினர் திடீர் சுற்றி வளைப்பு மேற்கொண்டு தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் தேடப்படும் நபர்களைக் கைது செய்தல் மற்றும் போதைப் பொருளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் குறித்த திடீர் சுற்றி வளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

வவுனியா தலைமை காவல்துறை பொறுப்பதிகாரி ஜே.ஏ.ஏ.எஸ்.ஜெயக்கொடி அவர்களின் வழிகாட்டலில், சிரேஷ்ட காவல்துறை பரிசோதகர் விஜயவன்ச தலைமையில் இந்த நடவடிக்கை சுமார் 3 மணி நேரம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது, வவுனியா தேக்கவத்தை ஆலடி சந்தியிலிருந்து தேக்கவத்தை மைதானம் வரையிலான பகுதியில் விசேட தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்களைக் கைது செய்தல், குற்றச்செயல்கள் தொடர்பில் தேடப்படும் நபர்களைக் கைது செய்தல், போதைப் போருள் பாவனையைக் கட்டுப்படுதல் போன்ற திட்டங்களுக்கு அமையவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.