Header image alt text

மலர்வு 19.02.1972 உதிர்வு 25.03.2015
25.03.2015ல் பிரான்ஸில் மரணமெய்திய தோழர் வில்சன் (எட்வேட் வில்சன்) அவர்களின் பத்தாம் ஆண்டு நினைவுநாள் இன்று…..

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கையூட்டல் மற்றும் ஊழில் ஒழிப்பு ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்ட அவர் கொழும்பு – புதுக்கடை நீதவான் நீதிமன்றில் இன்று பிற்பகல் முன்னிலைப்படுத்தப்பட்டார். இதன்போது அவரை எதிர்வரும் முதலாம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். Read more

பத்தாவது நாடாளுமன்றத்தின் இலங்கை ரூனெயளர் சீன நட்புறவு சங்கத்தின் தலைவர் பதவிக்கு சபை முதல்வரும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சருமான பிமல் ரத்னாயக்க தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இலங்கை சீன நாடாளுமன்ற நட்புறவு சங்கத்தை மீள ஸ்தாபிப்பதற்கான கூட்டம் அண்மையில் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் நாடாளுமன்றத்தில் நடைபெற்றபோதே இந்த தெரிவு இடம்பெற்றது.

அத்துடன், இலங்கை – சீன நாடாளுமன்ற நட்புறவு சங்கத்தின் செயலாளராக நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி லக்மாலி ஹேமச்சந்திர தெரிவு செய்யப்பட்டார்.

இந்த நிகழ்வில் இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் விசேட அதிதியாக கலந்துகொண்டதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கிராண்ட்பாஸ் காவல்துறை பிரிவிற்குட்பட்ட நாகலகம் வீதியில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபர் இன்று (25) கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடையவர் என காவல்துறை தெரிவித்தனர். சந்தேகநபர் புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செங்கலடி பகுதியில் மலசலக்கூடத்தில் உணவு தயாரித்து விற்பனை செய்த உணவக உரிமையாளருக்கு ஒருமாத கால சிறைத்தண்டனையும் 60 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு செங்கலடி பொதுச் சுகாதாரப் பிரிவில் உள்ள உணவகம் ஒன்றில் மலசலக்கூடத்தில் மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற முறையில் உணவு தயாரித்து விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு ஒரு மாத கால சிறைத்தண்டனையும் 60 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார். Read more

தேஷபந்து தென்னகோனை பொலிஸ் மாஅதிபர் பதவியிலிருந்து நீக்குவதற்கான பிரேரணை சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த பிரேரணையில் 115 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளதாக பிரதியமைச்சர் எரங்க குணசேகர தெரிவித்தார். தேஷபந்து தென்னகோன் எதிர்வரும் ஏப்ரல் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முன்னாள் பாதுகாப்பு படைகளின் பிரதானி சவேந்திர சில்வா உள்ளிட்ட நால்வருக்கு ஐக்கிய இராச்சியம் தடை விதித்துள்ளது. இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு இவர்கள் பொறுப்புக்கூற வேண்டியுள்ளதாக தெரிவித்து இந்த தைடகள் விதிக்கப்பட்டுள்ளன. Read more