பத்தாவது நாடாளுமன்றத்தின் இலங்கை ரூனெயளர் சீன நட்புறவு சங்கத்தின் தலைவர் பதவிக்கு சபை முதல்வரும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சருமான பிமல் ரத்னாயக்க தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இலங்கை சீன நாடாளுமன்ற நட்புறவு சங்கத்தை மீள ஸ்தாபிப்பதற்கான கூட்டம் அண்மையில் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் நாடாளுமன்றத்தில் நடைபெற்றபோதே இந்த தெரிவு இடம்பெற்றது.

அத்துடன், இலங்கை – சீன நாடாளுமன்ற நட்புறவு சங்கத்தின் செயலாளராக நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி லக்மாலி ஹேமச்சந்திர தெரிவு செய்யப்பட்டார்.

இந்த நிகழ்வில் இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் விசேட அதிதியாக கலந்துகொண்டதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.