காணி கையகப்படுத்தல் சட்டத்தை இலகுப்படுத்தும் நோக்கில் அச்சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள காணி கையகப்படுத்தல் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது காலம் வீண்விரயமாவதன் காரணமாக இலகுவான முறைமையொன்றின் ஊடாக காணிகளை கையகப்படுத்துவதற்கும், அதன் கீழ் இழப்பீடுகளை செலுத்தக்கூடிய வகையில் அதனைத் திருத்தம் செய்வதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. Read more
		    
நாட்டின் முன்னாள் பாதுகாப்பு தலைமையதிகாரிகளுக்கு பிரித்தானியா சமீபத்தில் விதித்த தடை குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். உள்நாட்டுப் போரின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்பு கூற வேண்டும் எனக் குற்றம் சுமத்தி நான்கு இலங்கையர்களுக்கு எதிராக பிரித்தானியா தடை விதித்துள்ளது. 
முன்னாள் இராணுவப் பிரதானிகள்  மூவர் உள்ளிட்ட நால்வருக்கு தடைகளை விதிப்பதற்கு ஐக்கிய இராச்சியம் எடுத்த தீர்மானம்  ஒருதலைப்பட்சமானது என வௌிவிவகாரம், வௌிநாட்டு வேலைவாய்ப்புகள் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு வலியுறுத்தியுள்ளது. இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகரை இன்று சந்தித்த வௌிவிவகார  அமைச்சர் விஜித ஹேரத் இலங்கையின் நிலைப்பாட்டை அறிவித்துள்ளார். 
ஜனாதிபதி செயலகத்திற்கு தொலைபேசி செயற்பாட்டாளராக பணியாற்றுகையில் T -56 தோட்டாவை வைத்திருந்ததாகக் கூறும் இராணுவ அதிகாரியை 48 மணிநேரம் தடுத்து வைத்து விசாரிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. பயணப் பொதியொன்றில் தோட்டாவை மறைத்து வைத்து ஜனாதிபதி செயலகத்திற்குள் நுழைய முயற்சித்த இராணுவ சிப்பாய் ஒருவரைக் கைது செய்துள்ளதாக ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது. கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் இராணுவ சமிக்ஞைப் படையில் கடமையாற்றும் வீரர் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.