ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சாவகச்சேரி பிரதேச சபை வேட்பாளர்களுக்கான அறிமுக கூட்டம் இன்றையதினம் (27.03.2025) நடைபெற்றது. இச்சந்திப்பில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் இணைத்தலைவர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன், கட்சியின் யாழ் மாவட்ட இணைப்பாளரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினரும், ஆசிரியருமான பா.கஜதீபன், Read more
		    
1974 ஆம் மற்றும் 1976 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற நிகழ்வுகளால் இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை மரபுரீதியாக தொடர்கிறது என இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். 
பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 3 குற்றச்சாட்டுக்களின் கீழ் கைதான அவர் கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டார். இதன்போது இரண்டு குற்றச்சாட்டுக்களுக்காக அவருக்கு பிணை வழங்கப்பட்டது. 
மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கையில் உள்ள நால்வருக்கு எதிராக தடைவிதித்துள்ளதன் ஊடாக பிரித்தானியா இலங்கையில் பொறுப்புக்கூறலை மேம்படுத்தியுள்ளதென சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. இலங்கையின் உள்நாட்டுப் போரின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் முன்னாள் இராணுவ தளபதிகளான சவேந்திர சில்வா, ஜகத் ஜயசூரிய, முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் முன்னாள் பிரதியமைச்சர் கருணா அம்மான் என்ற விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோருக்கு எதிராகப் பிரித்தானிய அரசாங்கம் தடைவிதித்துள்ளது. 
எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு ஏப்ரல் மாதம் 22, 23, 24 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளன. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்னாயக்க கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.