ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பருத்தித்துறை பிரதேச சபை வேட்பாளர்களுக்கான அறிமுக கூட்டம் இன்றையதினம் (28.03.2025) நடைபெற்றது. இச்சந்திப்பில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் இணைத்தலைவர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன், சி.நவீந்திரா (வேந்தன்) ஆகியோரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் சர்வேஸ்வரன், கட்சியின் யாழ் மாவட்ட இணைப்பாளரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினரும், ஆசிரியருமான பா.கஜதீபன், Read more
		    
1982.03.28ல் மரணித்த கழகத்தின் இராணுவப் பிரிவு பொறுப்பாளர் தோழர் காத்தான் (கிருஷ்ணசாமி கிருஷ்ணகுமார்) அவர்களின் 43ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…..
மியன்மாரில் 7.7 மெக்னிடியூட் அளவில் ஏற்பட்ட நில அதிர்வைத் தொடர்ந்து பெங்கொக் மற்றும் தாய்லாந்தில் உள்ள ஏனைய பிரதேசங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. நில அதிர்வினால், தாய்லாந்து தலைநகரில் மூன்று பேர் உயிரிழந்ததாகச் சர்வதேச ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. பெங்கொக்கில் உள்ள இலங்கைத் தூதரகம் தாய்லாந்து அதிகாரிகளுடன் இணைந்து நிலைமையைக் கண்காணித்து வருவதாகத் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. 
எதிர்வரும் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, இலங்கை தொழிலாளர் கட்சி, ஐக்கிய தேசிய கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வெவ்வேறு மாவட்டங்களில் தாக்கல் செய்த வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 
சுகாதார அமைச்சின் முன்னால் கைது செய்யப்பட்ட சுகாதார பட்டதாரிகள் 25 பேருக்கும் மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளரையும் மற்றொருவரையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு யுத்தம் காரணமாக நாட்டை விட்டு புலம்பெயர்ந்து இந்தியாவில் ஏதிலிகளாக வாழ்கின்ற இலங்கையர்கள் மீண்டும் நாட்டிற்கு திரும்பும் போது அவர்கள் இலங்கையில் நிலையாக வாழ்வதற்குரிய வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதற்கான கலந்துரையாடல் ஒன்று அண்மையில் நடைபெற்றது. இலங்கை ஏதிலியர் மறுவாழ்வு கழகத்தின் ஏற்பாட்டில் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ .ஜி.எம் ஹேமந்தகுமார தலைமையில் இந்த கலந்துரையாடல் நடைபெற்றது.