மியன்மாரில் 7.7 மெக்னிடியூட் அளவில் ஏற்பட்ட நில அதிர்வைத் தொடர்ந்து பெங்கொக் மற்றும் தாய்லாந்தில் உள்ள ஏனைய பிரதேசங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. நில அதிர்வினால், தாய்லாந்து தலைநகரில் மூன்று பேர் உயிரிழந்ததாகச் சர்வதேச ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. பெங்கொக்கில் உள்ள இலங்கைத் தூதரகம் தாய்லாந்து அதிகாரிகளுடன் இணைந்து நிலைமையைக் கண்காணித்து வருவதாகத் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், தாய்லாந்தில் உள்ள இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை எனத் தாய்லாந்துக்கான இலங்கை தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.

அத்துடன், அங்குள்ள இலங்கையர்கள் அவசர சந்தர்ப்பங்களில் 0066 812 498 011 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஆறு மணித்தியாலங்களுக்கு மக்கள் பின் அதிர்வுகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.