Header image alt text

முல்லைத்தீவு மாவட்டம் கரைதுறைப்பற்று மற்றும் புதுக்குடியிருப்பு ஆகிய பிரதேச சபைகளுக்கான ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் இன்றையதினம் (29.03.2025) முள்ளியவளை தண்ணீருற்று அரிமத்தியா மண்டபத்தில் நடைபெற்றது. எமது கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் க.தவராஜா மாஸ்டர் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் இணைத்தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், எமது கட்சியின் பொருளாளர் க.சிவநேசன், கட்சியின் இளைஞர் பிரிவு பொறுப்பாளர் யூட்சன்,

Read more

முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு மற்றும் துணுக்காய் ஆகிய பிரதேச சபைகளுக்கான ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் இன்றையதினம் (29.03.2025) மல்லாவியில் நடைபெற்றது. எமது கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் க.தவராஜா மாஸ்டர் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் இணைத்தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், எமது கட்சியின் பொருளாளர் க.சிவநேசன், கட்சியின் இளைஞர் பிரிவு பொறுப்பாளர் யூட்சன்,

Read more

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய தலைவராக ரஜீவ் அமரசூரிய நியமிக்கப்பட்டுள்ளார். இவர் சட்டத்தரணிகள் சங்கத்தின் 29 ஆவது தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரித்தானிய அரசாங்கத்தைக் கண்டிப்பதை விடுத்து, வழங்கிய வாக்குறுதிக்கு ஏற்ப தற்போதைய அரசாங்கம் புதிய அரசியலமைப்பை உடனடியாக கொண்டுவரவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார். இலங்கையர்கள் நால்வருக்கு எதிரான பிரித்தானியாவின் தடை குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். Read more

ஆனையிறவு உப்பு தொழிற்சாலை இன்று திறந்து வைக்கப்பட்டது. இந்த தொழிற்சாலை மூலம் ஒரு மணி நேரத்திற்கு சுமார் 5 மெட்ரிக் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுவதாக தேசிய உப்பு நிறுவனத்தின் தலைவர் கயான் வெல்லால தெரிவித்தார். 1937 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட ஆனையிறவு உப்பளத்தில் 1938 ஆம் ஆண்டில் உப்பு உற்பத்தி ஆரம்பிக்கப்பட்டிருந்தது. Read more

பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்ட பொலிஸ் மாஅதிபர் தேஷபந்து தென்னகோன் தலைமறைவாக இருக்க உதவிய குற்றச்சாட்டில் இருவர் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட பாதுகாப்பு பிரிவின் கான்ஸ்டபிள் உள்ளிட்ட இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர். நீதிமன்றில் ஆஜராகுமாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸ் மாஅதிபர் தேஷபந்து தென்னகோன் தலைமறைவாக இருக்க சந்தேகநபர்கள் உதவியுள்ளதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர். Read more

மியன்மரில் ஏற்பட்ட நில அதிர்வால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,002 ஆக உயர்ந்துள்ளது. 2,376 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மேலும் 30 பேர் காணாமல் போயுள்ளனர்.