கொழும்பில் ஸ்டிக்கர் ஒட்டிய சம்பவம் தொடர்பாக 22 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவத்தைத் தெளிவுபடுத்தி காவல்துறை ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. குறித்த இளைஞர், ஏதோவொரு வகையில் பயங்கரவாதச் செயலொன்றை செய்வதற்குத் தயாரானவர் என்ற நியாயமான சந்தேகத்தின் பேரில் அவர் கைது செய்யப்பட்டதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. Read more
இந்தியாவின் திருச்சியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கான விமான சேவை 47 ஆண்டுகளுக்கு பின்னர் இன்று(30) மீண்டும் ஆரம்பமானது. திருச்சியில் இருந்து பிற்பகல் 01.25 க்கு புறப்பட்ட விமானம் பிற்பகல் 2.02 அளவில் பலாலியில் உள்ள யாழ். சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது. 27 பயணிகளுடன் வருகைதந்த விமானத்திற்கு இதன்போது வரவேற்பளிக்கப்பட்டது.
மாத்தளை பகுதியிலுள்ள காட்டுப்பகுதியிலிருந்து T-56 ரக துப்பாக்கியும் 02 தோட்டாக்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பயணப்பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அவை கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். T-56 ரக துப்பாக்கியையும் அதற்கான தோட்டாக்களையும் மறைத்து வைத்திருந்த சந்தேகநபரை தேடி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.