கேள்வி :Posted by plotenewseditor on 31 March 2025
Posted in செய்திகள்
கேள்வி :Posted by plotenewseditor on 31 March 2025
Posted in செய்திகள்
கொழும்பு வலயத்தில் உள்ள உப தொடருந்து நிலையங்களில், இணைந்த சேவையில் ஈடுபட்டுள்ள சகல தொடருந்து நிலைய அதிபர்களும் இன்று நள்ளிரவு முதல் தொடருந்து நிலைய கடமைகளிலிருந்து விலகத் தீர்மானித்துள்ளனர். தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது. Read more
Posted by plotenewseditor on 31 March 2025
Posted in செய்திகள்
ரொட்டும்ப அமில என அழைக்கப்படும் திட்டமிட்ட குற்றக்கும்பல் உறுப்பினரான அமில சம்பத் ரஷ்யாவில் கைது செய்யப்பட்டுள்ளார். ரஷ்ய சட்ட அமுலாக்க அதிகாரிகளால் குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அந்த நாட்டின் பாதுகாப்பு அதிகாரிகள் இலங்கையின் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அறிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Posted by plotenewseditor on 31 March 2025
Posted in செய்திகள்
அம்பலாந்தோட்டை – கொக்கல்ல பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். குறித்த நபர் தமது வீட்டில் இருந்தபோது இன்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த 30 வயதான நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். Read more
Posted by plotenewseditor on 31 March 2025
Posted in செய்திகள்
சட்டவிரோதமாக ஈட்டப்பட்ட சொத்துக்களை மீட்பதற்கான சட்டமூலம் எதிர்வரும் ஏப்ரல் 8 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். மாத்தறை வெலிப்பிட்டிய பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். Read more
Posted by plotenewseditor on 31 March 2025
Posted in செய்திகள்
உள்நாட்டு விமான சேவைகளை அதிகரிப்பதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருவதாக போக்குவரத்துஇ நெடுஞ்சாலைகள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். பலாலி சர்வதேச விமான நிலையத்திற்குக் கண்காணிப்பு விஜயம் மேற்கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இதற்குத் தேவையான சட்டங்களைத் திருத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க இதன்போது தெரிவித்தார்.