ரொட்டும்ப அமில என அழைக்கப்படும் திட்டமிட்ட குற்றக்கும்பல் உறுப்பினரான அமில சம்பத் ரஷ்யாவில் கைது செய்யப்பட்டுள்ளார். ரஷ்ய சட்ட அமுலாக்க அதிகாரிகளால் குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அந்த நாட்டின் பாதுகாப்பு அதிகாரிகள் இலங்கையின் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அறிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.