முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு மற்றும் துணுக்காய் ஆகிய பிரதேச சபைகளுக்கான ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் இன்றையதினம் (29.03.2025) மல்லாவியில் நடைபெற்றது. எமது கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் க.தவராஜா மாஸ்டர் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் இணைத்தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், எமது கட்சியின் பொருளாளர் க.சிவநேசன், கட்சியின் இளைஞர் பிரிவு பொறுப்பாளர் யூட்சன்,
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய தலைவராக ரஜீவ் அமரசூரிய நியமிக்கப்பட்டுள்ளார். இவர் சட்டத்தரணிகள் சங்கத்தின் 29 ஆவது தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரித்தானிய அரசாங்கத்தைக் கண்டிப்பதை விடுத்து, வழங்கிய வாக்குறுதிக்கு ஏற்ப தற்போதைய அரசாங்கம் புதிய அரசியலமைப்பை உடனடியாக கொண்டுவரவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார். இலங்கையர்கள் நால்வருக்கு எதிரான பிரித்தானியாவின் தடை குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஆனையிறவு உப்பு தொழிற்சாலை இன்று திறந்து வைக்கப்பட்டது. இந்த தொழிற்சாலை மூலம் ஒரு மணி நேரத்திற்கு சுமார் 5 மெட்ரிக் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுவதாக தேசிய உப்பு நிறுவனத்தின் தலைவர் கயான் வெல்லால தெரிவித்தார். 1937 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட ஆனையிறவு உப்பளத்தில் 1938 ஆம் ஆண்டில் உப்பு உற்பத்தி ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்ட பொலிஸ் மாஅதிபர் தேஷபந்து தென்னகோன் தலைமறைவாக இருக்க உதவிய குற்றச்சாட்டில் இருவர் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட பாதுகாப்பு பிரிவின் கான்ஸ்டபிள் உள்ளிட்ட இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர். நீதிமன்றில் ஆஜராகுமாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸ் மாஅதிபர் தேஷபந்து தென்னகோன் தலைமறைவாக இருக்க சந்தேகநபர்கள் உதவியுள்ளதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மியன்மரில் ஏற்பட்ட நில அதிர்வால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,002 ஆக உயர்ந்துள்ளது. 2,376 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மேலும் 30 பேர் காணாமல் போயுள்ளனர்.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பருத்தித்துறை பிரதேச சபை வேட்பாளர்களுக்கான அறிமுக கூட்டம் இன்றையதினம் (28.03.2025) நடைபெற்றது. இச்சந்திப்பில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் இணைத்தலைவர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன், சி.நவீந்திரா (வேந்தன்) ஆகியோரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் சர்வேஸ்வரன், கட்சியின் யாழ் மாவட்ட இணைப்பாளரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினரும், ஆசிரியருமான பா.கஜதீபன்,
1982.03.28ல் மரணித்த கழகத்தின் இராணுவப் பிரிவு பொறுப்பாளர் தோழர் காத்தான் (கிருஷ்ணசாமி கிருஷ்ணகுமார்) அவர்களின் 43ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…..
மியன்மாரில் 7.7 மெக்னிடியூட் அளவில் ஏற்பட்ட நில அதிர்வைத் தொடர்ந்து பெங்கொக் மற்றும் தாய்லாந்தில் உள்ள ஏனைய பிரதேசங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. நில அதிர்வினால், தாய்லாந்து தலைநகரில் மூன்று பேர் உயிரிழந்ததாகச் சர்வதேச ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. பெங்கொக்கில் உள்ள இலங்கைத் தூதரகம் தாய்லாந்து அதிகாரிகளுடன் இணைந்து நிலைமையைக் கண்காணித்து வருவதாகத் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, இலங்கை தொழிலாளர் கட்சி, ஐக்கிய தேசிய கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வெவ்வேறு மாவட்டங்களில் தாக்கல் செய்த வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.