சுகாதார அமைச்சின் முன்னால் கைது செய்யப்பட்ட சுகாதார பட்டதாரிகள் 25 பேருக்கும் மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளரையும் மற்றொருவரையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
		    
உள்நாட்டு யுத்தம் காரணமாக நாட்டை விட்டு புலம்பெயர்ந்து இந்தியாவில் ஏதிலிகளாக வாழ்கின்ற இலங்கையர்கள் மீண்டும் நாட்டிற்கு திரும்பும் போது அவர்கள் இலங்கையில் நிலையாக வாழ்வதற்குரிய வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதற்கான கலந்துரையாடல் ஒன்று அண்மையில் நடைபெற்றது. இலங்கை ஏதிலியர் மறுவாழ்வு கழகத்தின் ஏற்பாட்டில் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ .ஜி.எம் ஹேமந்தகுமார தலைமையில் இந்த கலந்துரையாடல் நடைபெற்றது. 
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சாவகச்சேரி பிரதேச சபை வேட்பாளர்களுக்கான அறிமுக கூட்டம் இன்றையதினம் (27.03.2025) நடைபெற்றது. இச்சந்திப்பில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் இணைத்தலைவர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன், கட்சியின் யாழ் மாவட்ட இணைப்பாளரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினரும், ஆசிரியருமான பா.கஜதீபன், 
1974 ஆம் மற்றும் 1976 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற நிகழ்வுகளால் இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை மரபுரீதியாக தொடர்கிறது என இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். 
பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 3 குற்றச்சாட்டுக்களின் கீழ் கைதான அவர் கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டார். இதன்போது இரண்டு குற்றச்சாட்டுக்களுக்காக அவருக்கு பிணை வழங்கப்பட்டது. 
மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கையில் உள்ள நால்வருக்கு எதிராக தடைவிதித்துள்ளதன் ஊடாக பிரித்தானியா இலங்கையில் பொறுப்புக்கூறலை மேம்படுத்தியுள்ளதென சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. இலங்கையின் உள்நாட்டுப் போரின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் முன்னாள் இராணுவ தளபதிகளான சவேந்திர சில்வா, ஜகத் ஜயசூரிய, முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் முன்னாள் பிரதியமைச்சர் கருணா அம்மான் என்ற விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோருக்கு எதிராகப் பிரித்தானிய அரசாங்கம் தடைவிதித்துள்ளது. 
எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு ஏப்ரல் மாதம் 22, 23, 24 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளன. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்னாயக்க கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 
காணி கையகப்படுத்தல் சட்டத்தை இலகுப்படுத்தும் நோக்கில் அச்சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள காணி கையகப்படுத்தல் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது காலம் வீண்விரயமாவதன் காரணமாக இலகுவான முறைமையொன்றின் ஊடாக காணிகளை கையகப்படுத்துவதற்கும், அதன் கீழ் இழப்பீடுகளை செலுத்தக்கூடிய வகையில் அதனைத் திருத்தம் செய்வதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 
நாட்டின் முன்னாள் பாதுகாப்பு தலைமையதிகாரிகளுக்கு பிரித்தானியா சமீபத்தில் விதித்த தடை குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். உள்நாட்டுப் போரின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்பு கூற வேண்டும் எனக் குற்றம் சுமத்தி நான்கு இலங்கையர்களுக்கு எதிராக பிரித்தானியா தடை விதித்துள்ளது. 
முன்னாள் இராணுவப் பிரதானிகள்  மூவர் உள்ளிட்ட நால்வருக்கு தடைகளை விதிப்பதற்கு ஐக்கிய இராச்சியம் எடுத்த தீர்மானம்  ஒருதலைப்பட்சமானது என வௌிவிவகாரம், வௌிநாட்டு வேலைவாய்ப்புகள் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு வலியுறுத்தியுள்ளது. இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகரை இன்று சந்தித்த வௌிவிவகார  அமைச்சர் விஜித ஹேரத் இலங்கையின் நிலைப்பாட்டை அறிவித்துள்ளார்.