ஜனாதிபதி செயலகத்திற்கு தொலைபேசி செயற்பாட்டாளராக பணியாற்றுகையில் T -56 தோட்டாவை வைத்திருந்ததாகக் கூறும் இராணுவ அதிகாரியை 48 மணிநேரம் தடுத்து வைத்து விசாரிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. பயணப் பொதியொன்றில் தோட்டாவை மறைத்து வைத்து ஜனாதிபதி செயலகத்திற்குள் நுழைய முயற்சித்த இராணுவ சிப்பாய் ஒருவரைக் கைது செய்துள்ளதாக ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது. கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் இராணுவ சமிக்ஞைப் படையில் கடமையாற்றும் வீரர் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். Read more
		    
மலர்வு 19.02.1972 உதிர்வு 25.03.2015
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கையூட்டல் மற்றும் ஊழில் ஒழிப்பு ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்ட அவர் கொழும்பு – புதுக்கடை நீதவான் நீதிமன்றில் இன்று பிற்பகல் முன்னிலைப்படுத்தப்பட்டார். இதன்போது அவரை எதிர்வரும் முதலாம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். 
பத்தாவது நாடாளுமன்றத்தின் இலங்கை ரூனெயளர் சீன நட்புறவு சங்கத்தின் தலைவர் பதவிக்கு சபை முதல்வரும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சருமான பிமல் ரத்னாயக்க தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இலங்கை சீன நாடாளுமன்ற நட்புறவு சங்கத்தை மீள ஸ்தாபிப்பதற்கான கூட்டம் அண்மையில் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் நாடாளுமன்றத்தில் நடைபெற்றபோதே இந்த தெரிவு இடம்பெற்றது.
கிராண்ட்பாஸ் காவல்துறை பிரிவிற்குட்பட்ட நாகலகம் வீதியில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபர் இன்று (25) கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடையவர் என காவல்துறை தெரிவித்தனர். சந்தேகநபர் புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செங்கலடி பகுதியில் மலசலக்கூடத்தில் உணவு தயாரித்து விற்பனை செய்த உணவக உரிமையாளருக்கு ஒருமாத கால சிறைத்தண்டனையும் 60 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு செங்கலடி பொதுச் சுகாதாரப் பிரிவில் உள்ள உணவகம் ஒன்றில் மலசலக்கூடத்தில் மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற முறையில் உணவு தயாரித்து விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு ஒரு மாத கால சிறைத்தண்டனையும் 60 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார். 
தேஷபந்து தென்னகோனை பொலிஸ் மாஅதிபர் பதவியிலிருந்து நீக்குவதற்கான பிரேரணை சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த பிரேரணையில் 115 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளதாக பிரதியமைச்சர் எரங்க குணசேகர தெரிவித்தார். தேஷபந்து தென்னகோன் எதிர்வரும் ஏப்ரல் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முன்னாள் பாதுகாப்பு படைகளின் பிரதானி சவேந்திர சில்வா உள்ளிட்ட நால்வருக்கு ஐக்கிய இராச்சியம் தடை விதித்துள்ளது. இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு இவர்கள் பொறுப்புக்கூற வேண்டியுள்ளதாக தெரிவித்து இந்த தைடகள் விதிக்கப்பட்டுள்ளன. 
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வலி தென்மேற்கு (மானிப்பாய்) பிரதேச சபை வேட்பாளர்களுக்கான கலந்துரையாடல் இன்றையதினம் (24.03.2025) கந்தரோடையில் நடைபெற்றது. இச்சந்திப்பில் புளொட் தலைவரும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் இணைத்தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், கட்சியின் யாழ் மாவட்ட இணைப்பாளரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினரும், ஆசிரியருமான பா.கஜதீபன்,
 
கேள்வி 01 : ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் பங்காளிக் கட்சியாக இயங்கிய தமிழ்த் தேசியக் கட்சி நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில் கஜேந்திரகுமாரின் கூட்டணிக் கட்சியாக மாறியுள்ளதே? இது குறித்து உங்கள் கூட்டணியின் நிலைப்பாடு என்ன? இதன் தாக்கங்கள் என்ன?