மட்டக்களப்பு மாவட்டத்தில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி கோரளைப்பற்று வாழைச்சேனை, ஏறாவூர்பற்று செங்கலடி, ஏறாவூர் நகரசபை, மண்முனைப்பற்று ஆராயம்பதி, மண்முனை மேற்கு வவுணதீவு, எரிவில்பற்று களுவாஞ்சிக்குடி ஆகிய ஆறு சபைகளுக்கு வேட்புமனுக்களைச் சமர்ப்பித்திருந்தது. அவை அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
கிராண்ட்பாஸ் நாகலகம வீதி துப்பாக்கிச்சூட்டு சம்பவம் சந்தேகநபரின் மனைவி கைது கிராண்ட்பாஸ் நாகலகம வீதி பகுதியில் இருவர் மீது துப்பாக்கிச்சூடு மேற்கொண்டமை தொடர்பில் மேலும்மொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டார். வெல்லம்பிட்டி கொட்டுவில பகுதியைச் சேர்ந்த 24 வயதான யுவதியொருவர் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டார்.
2023 ஆம் ஆண்டில் மாத்தறை வெலிகம பெலேன பதியிலுள்ள W15 ஹோட்டலுக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பான வழக்கின் ஏனைய 06 சந்தேகநபர்களும் மாத்தறை நீதவான் நீதிமன்றில் இன்று சரணடைந்தனர். நகர்த்தல் பத்திரமொன்றை தாக்கல் செய்து அவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலையாகினர்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொறுப்பை தாம் இதுவரை இராஜினாமா செய்யவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார். தனிப்பட்ட காரணங்களுக்காக தாம் இடமாற்றம் கோரியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். ஊடகப்பேச்சாளராக ஒருவர் நியமிக்கப்படும் வரை தம்மால் அந்த பொறுப்பிலிருந்து விலகியிருக்க முடியாது என அவர் கூறினார்.
ஏற்றுமதி ஊக்குவிப்பு வலயத்தின் தீயணைப்புப் பிரிவினை வலுப்படுத்துவதற்காக ஜப்பான் 590 மில்லியன் ரூபா நிதியுதவியை வழங்கியது. நாட்டிலுள்ள 14 ஏற்றுமதி ஊக்குவிப்பு வலயங்களில் உள்ள 285 நிறுவனங்களில் 145,000 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.
உள்நாட்டு இறைவரி சட்டமூலம் இன்று (20) நாடாளுமன்றத்தில் திருத்தமின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சட்டமூலம் தொடர்பான இரண்டாம் வாசிப்பு தொடர்பான விவாதம் இன்று மாலை 5.00 மணி முதல் 5.40 மணிவரை இடம்பெறவுள்ளது. குறித்த சட்டமூலம், குழுவின் பரிசீலனைக்கு பின்னர் எவ்வித திருத்தங்களுமின்றி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் இராஜாங்க அமைச்சர்களான பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தன் மற்றும் சதாசிவம் வியாழேந்திரன் தலைமையிலான கிழக்கு தமிழர் கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 11 உள்ளுராட்சி மன்றங்களுக்காக இன்றைய தினம் வேட்புமனுவை தாக்கல் செய்தது.