மோட்டார் வாகனங்கள் தொடர்பான அனைத்து சேவைகளுக்காகவும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பிலான அறிக்கை ஒன்றை அந்த திணைக்களம் இன்று வெளியிட்டுள்ளது.
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படும் மோட்டார் வாகனம் தொடர்பிலான அனைத்து சேவைகளுக்காகவும் இம்மாதம் 15 ஆம் திகதி முதல் கட்டாயமாக வரி செலுத்துவோர் அடையாள இலக்கம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
முச்சக்கரவண்டி, உந்துருளி, உழவு வண்டி தவிர்ந்த ஏனைய வாகனங்களுக்காக பதிவு செய்தலின் போது அல்லது கையளிப்பின் போது வரி செலுத்துவோர் அடையாள இலக்கம் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.