இலங்கை மீதான அமெரிக்காவின் வரி விதிப்பினால் நாட்டின் பொருளாதாரம் பாதிப்படையும் சாத்தியம் நிலவுவதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் கற்கை பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்தார். அமெரிக்காவின் நடவடிக்கையானது இலங்கையில் உள்ள சில தொழிற்சாலைகளை மூடுவதற்கு வழிவகுக்கும் எனவும் அவர்  குறிப்பிட்டார். Read more
		    
ஹிக்கடுவை ரூனெயளர் குமாரகந்த பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவர் உயிரிழந்துள்ளார் . 51 வயதுடைய ஆணொருவரே உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விளக்கமறியலில் உள்ள காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோன் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இன்று அவரை மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
வழக்கு நடவடிக்கைகளின் போது முறைகேடுகள் செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்ட மாரவில நீதவான் மற்றும் மேலதிக மாவட்ட நீதவான் அசேல சில்வாவை உடனமுலுக்கு வரும் வகையில் பணி இடைநிறுத்தம் செய்ய நீதிச்சேவை ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. மாரவில நீதிமன்றத்தின் சட்டத்தரணிகள் சிலரால் நீதிச்சேவை ஆணைக்குழுவுக்குப் பல முறைப்பாடுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.