இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நாட்டை வந்தடைந்தார். இந்தியப் பிரதமருக்கான உத்தியோகபூர்வ வரவேற்பு நிகழ்வு நாளை காலை கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் நடைபெறவுள்ளது. இந்தியப் பிரதமர், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடனும், ஏனைய பல தரப்பினருடனும் கலந்துரையாடல்களை நடத்துவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Read more
		    
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறும் திகதியில் எந்தவித மாற்றமும் இல்லை எனத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம். ஏ. எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழுவில் கருத்துரைத்த அவர்  உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குச்சீட்டுக்களை அச்சிடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். 
மியன்மாரில் நிவாரண பணிகளில் ஈடுபடுவதற்காக முப்படைகளின் மூன்று குழுக்கள் நாளை விசேட விமானத்தின் மூலம் மியன்மாருக்குச் செல்லவுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. மியன்மாரில் ஏற்பட்ட நில அதிர்வின் காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்குவதற்காக வைத்தியர்கள் குழுவொன்றும் செல்ல தயாராகவுள்ளதாகத் தெரிவித்துப் பாதுகாப்பு அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. 
நீதிமன்ற உத்தரவுகளை மீறி நடைபெற்ற போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் மதுஷான் சந்திரஜித் உள்ளிட்ட இருவர் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சுக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட போது பட்டதாரிகள் குழுவொன்று கைது செய்யப்பட்டது. கைது செய்யப்பட்டவர்களில் 25 பேர் ஏற்கனவே பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர். 
காங்கேசன்துறைக்கும் – தமிழகத்தின் நாகபட்டினத்துக்கும் இடையேயான சிவகங்கை கப்பல் சேவை, சீராக இடம்பெறுவதாக அந்த கப்பல் நிறுவனத்தின் பணிப்பாளர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார். குறித்த கப்பல் சேவையில் தடங்கல் இருப்பதாகத் தகவல் வெளியான நிலையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.